
22 ஆண்டுகள் கழித்து உருவாகி வருகிறது இந்தியன் 2’ . கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’.
கடந்த ஜனவரி 18-ம் தேதி பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு சில பிரச்னைகளால் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு, பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ரகுல் ப்ரீத் சிங்கிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
[youtube-feed feed=1]