திருச்சி,
பாசனத்திற்காக கல்லணை இன்று திறக்கப்பட்டது. இதன் காரணமாக 14 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி அருகே அமைந்துள்ள கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சம்பா சாகுபடி பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு உள்பட 6 அமைச்சர்கள் உள்பட 5 மாவட்ட ஆட்சி தலைவர்களும் கலந்துகொண்டு தண்ணீரில் மலர்தூவி திறக்கப்பட்ட தண்ணீரை வரவேற்றனர்.
கல்லணையின் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், காரைக்கால், கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள சுமார் 14 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அரசு பாசனத்திற்காக நீர் திறந்ததற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்று மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்.