திருச்சி:
ம்பா சாகுபடிக்காக திருச்சியில் உள்ள கல்லணை திறக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
samba2
காவிரியில் கர்நாடக தண்ணீர் திறந்துவிட்டதை தொடர்ந்து, மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அங்கிருந்த வந்த தண்ணீர் திருச்சி அருகே உள்ள  கல்லணை வந்தடைந்தது. விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய ஏதுவாக கல்லணை திறக்கப்பட்டது.
கல்லணையிலி இருந்து,  சம்பா சாகுபடிக்காக காவிரியில் விநாடிக்கு 3600 கனஅடி நீரும், வெண்ணாற்றில் 3600 கனஅடி நீரும், கல்லணை கால்வாயில் 1000 கனஅடி நீரும், கொள்ளிடத்தில் 800 கனஅடிநீரும் திறந்து விடப்பட்டது.
கல்லணையில் தண்ணீர் திறப்பால் டெல்டா மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், துரைகண்ணு, ஓ.எஸ்.மணியன், நடராஜ், காமராஜ், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களும் விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.