கள்ளக்குறிச்சி:
மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் கடந்த 13ஆம் தேதியிலிருந்து அவரது பெற்றோர்களால் வாங்கப்படாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது. அவரது உடலுக்கு இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில் இன்று பெரிய நெசலூர் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்போது கிராமத்தில் போலீசார் ஒலிபெருக்கி மூலமாக மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், வெளி ஆட்களோ பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.
இதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலைப் பெற்றுக் கொள்ள ஸ்ரீமதியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.