சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து தமிழகஅரசுக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், தேமுதிக சார்பில்  ஜூன் 25ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி பகுதியில் திமுக நபர் விற்பனை செய்யத  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் நிவாரணமும் வழங்கி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, திமுக அரசின் கையாலாகதனத்தாலேயே தமிழ்நாட்டில் கள்ளச்சாராய நிகழ்வுகள் அதிகரித்து வருவதாகவும், கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன்,   எதிர்க்கட்சிகள் சார்பில்  திமுக அரசை கண்டித்து போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன,.

 ஏற்கனவே அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து  உள்ளது. அதுபோல திமுக கூட்டணி கட்சியான விசிகவும் திமுக அரசுக்கு எதிராக குல் எழுப்பி, போராட்டத்தை அறிவித்து உள்ளது.  இந்த வரிசையில்,  தற்போது தே.மு.தி.க.வும் இணைந்து ள்ளது. தேமுதிக சார்பில் ஜூன் 25 ஆம் தேதி  திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக ஜூன் 25, செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.” “இதில் மாவட்ட கழக செயலாளர்கள் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணி பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும் அன்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.