சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு காவல்துறை கடுமையான கெடுபிடிக்களை அறிவித்து உள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி, தொண்டர்கள் கலந்துகொள்ளக்கூடாது என தடை விதித்துள்ளது. காவல்துறையினரின் கெடுபிடி இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக உள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு 63 ஆக உயர்ந்துள்ள நிலையில் 15 பேருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் திமுக நபர்கள் பலரது பெயர்கள் அடிபடுகிறது. இதனால், காவல்துறையினர் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தமிழ்நாடு அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்து வருகிறது. மேலும் இதுகுறித்து சட்டப்பேரவையில் முறையான விவாதம் நடத்தவும் தடை விதிக்கிறது.
இதனால், கள்ளச்சாராய சம்பவத்தில் முறையான விசாரணை நடைபெற உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க. சார்பில் இன்று (ஜுன் 27) உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாரய மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரியும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் அதி.மு.க சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை அனுமதி கெடுபிடி
அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், தொண்டர்கள் கலந்துகொள்ளக்கூடாது என தடை விதித்துள்ளது. காவல்துறையினரின் கெடுபிடி இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக உள்ளது.
மேலும் அதிமுக உண்ணாவிரத போராட்டம், சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு பதிலாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கு கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு போராட்டத்திற்கு சென்னை மாநகர காவல்துறை 23 நிபந்தனைகள் விதித்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காவல் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகளை தாக்கி பேசவோ, முழக்கம் எழுப்பவோ கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.