சென்னை: 69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்  மீது போடப்பட்ட  குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் 69பேர் உயிரிழந்த நிலையில், இந்த கொடூர நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்ததாக கைது செய்யப்பட்டவர்களின் 18பேர் காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, காவல்துறையினர்,   சம்பந்தப்பட்ட ஆவணங்களை  முறையாக வழங்காமல் கடந்த 6 மாதங்களாக இழுத்தடித்து வந்த நிலையில், அவர்கள்மீதான  குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக இந்த வழக்கின் இறுதி விசாரணை 2024, டிசம்பர் 20ந்தேதி அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நநீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிர மணியம், எம்.ஜோதிராமன் அமர்வில்,    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் அனைத்து வழக்குகளிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், இறுதி விசாரணைக்காக வழக்கை ஜனவரி 6-ந்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், அவர்களின் மனுவை ரத்து செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை  எதன் அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும் என்று  கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு  வழக்கறிஞர், அவவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதன் காரணமாக இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாக பதில் அளித்தார்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  இத்தனை ஆண்டுகளாக  அந்த பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது என்றால் மதுவிலக்கு போலீசார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், கள்ளச்சாராயம் விற்பனை விஷயத்தில், அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து இந்த அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை முறையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, 18 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.  கண்ணுக்குத் தெரிந்த கள்ளச்சாராய  குற்றவாளி களுக்கே தண்டனை இல்லை. இதில் கண்ணுக்குத் தெரியாத, மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த   சாரை யார் பிடிப்பார்?  என கேள்வி எழுப்பி வருகிறனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: குண்டர் சட்டம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை….

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு….

69பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு! அமைச்சர் ரகுபதி…