சென்னை: 68 பேரின் உயிரை காவுகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 68-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு கண் பார்வை பறிபோனது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி வந்தது. ஆனால், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான நிகழ்வுகளில் திமுகவினர் சிலர் தொடர்பில் இருந்தால், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக, பாமக என எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடின.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சிபிசிஐடி விசாரணையில் அதிருப்தி அடைந்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும். எனவே தமிழக காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…