கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 18ந்தேதி (ஜுன்) கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கண்ணுக்குட்டி என்பவர் விற்பனை செய்த பாக்கெட் கள்ளச்சாராயத்தை குடித்த 200க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். அவர்கள், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அடுத்தது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை 60 பேர் உயிரிழந்த நிலையில் இன்று பலி எண்ணிக்கை 62ஆக உயர்ந்து.ளளது. சிகிச்சை பெற்று வந்தவரும், சேலம் மருத்துவமனையில் ஒருவரும் இன்று உயிரிழந்தனர். மேலுமை பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 155 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 10- பேர் சிகிச்சைபெற்று வருவதாகவும் ஜிப்மர் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.