மதுரை:
வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு தங்கப்பல்லக்கில் கொண்டு செல்லப்படும் நிகழ்வு நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழிநெடுகிலும் சுமார் 480 மண்டப படிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்; 3 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

வரும் 5ம் தேதி சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான காலை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.