சென்னை:
ல்கி பகவான். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கல்கி பகவான் தனது மனைவியுடன்
கல்கி பகவான் தனது மனைவியுடன்

கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.
இவருக்கு தமிழக, ஆந்திரா எல்லைப் பகுதிகளில் மேலும் பல ஆசிரமங்கள்  உள்ளன. உலகத்தை காப்பாற்ற வந்த கல்கி அவதாரம் என தன்னை இவர் அறிவித்துக்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை  அறிந்த அவரது பக்தர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அதே அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கல்கி பகவானும் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில பரபரப்பு கூடியிருக்கிறது.