தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜெயராம். இந்த வருடம் அல்லு அர்ஜூனுடன் இணைந்து அலவைகுந்தபுறமுலோ படத்தில் நடித்திருந்தார்.
ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் அறிமுகமான இவர்,
தற்போது சுதா கொங்கரா இயக்கவிருக்கும் ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார்.
https://www.instagram.com/p/CEqoQiDHvCb/
இந்நிலையில் நடிகர் காளிதாஸ் தனது அப்பாவின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து, உங்கள் சாக்குபோக்கை விட அதிகம் ஸ்டிராங்காக மாறுங்கள். இந்த மனிதர் தினமும் காலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். நான் அந்த வயதில் பாதி செய்தாலே நான் அதிர்ஷ்டசாலியாக உணர்வேன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.