ராமேஸ்வரம்
பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே கீதையுடன் பைபிள் மற்றும் குரான் புத்தகங்களை கலாமின் பேரன் வைத்தார்.
சமீபத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலைய ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பில் மோடி திறந்து வைத்தார். அதில் அவருடைய சிலை அருகே மத்திய அரசால் பகவத்கீதை புத்தகம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதச் சார்பற்று இருந்த கலாமுக்கு அருகில் மத நூலான கீதை புத்தகத்தை வைத்தது சர்ச்சையை உண்டாக்கியது. பலரும் பகவத் கீதை புத்தகத்தை அங்கிருந்து எடுத்து விட வேண்டும் எனவும், ஒரு சிலர் திருக்குறளை அங்கு வைக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அப்துல் கலாமின் (அண்ணன்) பேரன், அவர் சிலை அருகே பைபிள் மற்றும் குரான் புத்தகங்களையும் வைத்து சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார்.