தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

₹100 மதிப்புள்ள இந்த நினைவு நாணயத்தின் விற்பனை இந்திய அரசு காசாலை இணையத்தில் இன்று துவங்கியுள்ளது.

முன்னதாக ஆக 18ம் தேதி, கலைஞர் உருவம் பதித்த இந்த நாணயத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

இந்தியாவின் தேசிய ஆளுமை என்று கலைஞர் கருணாநிதிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அப்போது புகழாரம் சூட்டினார். தமிழ்நாட்டின் எல்லையைக் கடந்து பலதரப்பட்டவர்களை தன் பக்கம் ஈர்த்தவர் என்றும் கூறினார்.

கலைஞர் நினைவு நாணயம் ₹10,000த்திற்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு இதனை ₹2,500க்கு விற்க விலை நிர்ணயம் செய்தது.

ஆனால், தற்போது இந்திய அரசு காசாலை இணையத்தில் ₹4,180க்கு விற்பனை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.