சென்னை: கலைஞர் எழுதுகோல் விருது, சமூக ஊடகப்பிரிவு, பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்கள், அப்துல் கலாம் உள்பட தியாகிகளுக்கு சிலை வைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக விவாதக்ள் நடைபெற்றது. பின்னர் துறை சார்ந்து பதில்அளித்து பேசிய அமைச்சர் சாமிநாதன், கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும், சமூக ஊடகப்பிரிவு தொடங்கப்படும், பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்கள், அப்துல் கலாம் உள்பட மொழிப்போர் மற்றும் திராவிட தியாகிகளுக்கு சிலை நிறுவனப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைக்கப்படும்
ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும்
பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும் பணிக் காலத்தில் இறக்கும் பத்திரிக்கையாளர் குடும்ப நிவாரண நிதி 3 லட்சத்திலிருந்து 5லட்சமாக உயர்த்தப்படும்.அத்துடன் பத்திரிக்கையாளர்கள் மொழி திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும்.
இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க, பயிற்சி பெற்ற நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
“தாய்நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவப்படும்.
அதன்படி அண்ணா பல்கலை கடலூரில் சுதந்திரப் போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும் ” என்று அறிவித்துள்ளார்.