பிரபல நடிகை காஜல் அகர்வால், தனது காதலர் கவுதமை திருமணம் செய்த கையோடு மாலத்தீவுக்கு தேனிலவை கொண்டாட சென்றுள்ளார்.

அங்கு விதவிதமான உடைகள் அணிந்து, கணவருடன் தேனிலவு கொண்டாடும் புகைப்படங்களை காஜல், தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக தினமும் வெளியிட்டு வருகிறார். வழக்கம் போல் நேற்றும் தேனிலவு போட்டோக்களை வெளியிட்டிருந்தார்.

காஜல், தனது கணவருடன் கடலுக்கு அடியில் 16 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளார்.

 

அந்த ஓட்டலின் படுக்கை அறையில் கணவருடன் இருக்கும் படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

“தேனிலவு முடிந்து மீண்டும் ஷுட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் போது சோர்வாக உள்ளது” என காஜல் குறிப்பிட்டுள்ளார்.

– பா. பாரதி