இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சப் டைட்டிலுடன் இணையத்தில் இப்படம் பார்க்கக் கிடைக்கிறது. வட இந்திய ரசிகர்களும் கைதி பார்த்து புகழ்ந்து கமன்ட் செய்து வருகின்றனர்.
இந்தப் படத்தை இந்தியில் அஜய் தேவ்கான் நடிப்பில் ரீமேக் செய்கின்றனர். அவருக்கு ஜோடியாக மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கைதியின் சிறப்பம்சமே படத்தில் நாயகி, காதலி, பாட்டு, காமெடி என எந்த விஷயங்களும் இல்லாமல் இருந்ததே. ஆனால், இந்திக்கு ஏற்ப மாற்றுகிறோம் என்று நாயகனுக்கு மனைவி இருப்பது போல் கதையை மாற்றியுள்ளனர்.