சென்னை:
காடுவெட்டி குரு மரணமடைந்தை தொடர்ந்து சென்னை அப்பலோ மருத்துவமனை முன்பு வன்னியர் சங்கத்தினர் குவிந்து வருகின்றனர்.
வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் எம்எல்ஏ.வுமான காடுவெட்டி ஜெ.குரு அப்பலோ மருத்துவமனையில் இன்றிரவு மரணமடைந்தார்.
தகவலறிந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி மற்றும் பாமக முக்கிய நிர்வாகிகள் மருத்துமனைக்கு சென்றுள்ளர். குரு மறைவு செய்தி கேட்டு வன்னியர் சங்கத்தினரும், பாமக.வினரும் மருத்துவமனை முன்பு குவிய தொடங்கியுள்ளனர். அவர்கள் குரு மறைவையொட்டி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.