நம்ம ஊர் டைரக்டர் பிரபு சாலமன், ‘பாகுபலி’ புகழ் ராணாவை கதாநாயகனாக வைத்து புதிய படம் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயற்கை மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியத்தை இந்த படம் சொல்கிறது.
பெரும்பாலும் காட்டிலேயே படப்பிடிப்பு நடந்துள்ளது.
இந்தியில் “ஹாத்தி மேரா சாத்தி” என்ற பெயரிலும், தமிழில் “காடன்” என்ற பெயரிலும், தெலுங்கில் “ஆரண்யா” என்ற பெயரிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.
மார்ச் 26 ஆம் தேதி தமிழகத்திலும், தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலும் இந்த படம் ரிலீஸ் ஆவது உறுதி.
ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், இந்தியில் இந்த படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம்கோபால் வர்மா இயக்கிய புதிய படம் உள்ளிட்ட பல இந்தி படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
– பா. பாரதி