நடிகர் பார்த்திபன் தற்போது ஒத்த செருப்பு என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே. அதாவது பார்த்திபன் மட்டுமே இந்த படத்தில் நடித்துள்ளார்.

பார்த்திபனின் இந்த புதிய முயற்சிக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒத்த செருப்பு படத்தை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டியுள்ளார்.

இந்திய அளவில் தமிழ் சினிமாவுக்கு விருதுகள் இல்லை என்ற குறையை இந்த சினிமா போக்கும். அதற்கு அரசின் சார்பில் என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.

ஒத்த செருப்புதிரைப்படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.