அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங்கின் டீஸர் வெளியாகியுள்ளது.

ஷாஹித் கபூர் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்தப் படத்தை அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கியுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படம் ஜூன் 21-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.