
வாஷிங்டன்:
உலகின் பல நாடுகளில் வெளியாகும் ரஜினியின் “கபாலி” திரைப்படம், அமெரிக்காவிலும் வெளியாகிறது. இதன் முதல் காட்சியை (சிறப்புக்காட்சி) அமெரிக்காவில் சான்ஃபிரான்ஸிஸ்கோவில் உள்ள பே ஏரியாவில் கபாலி திரையிடப்பட்டது. அதில் ரஜினி, தனது மகளுடன் பார்த்து ரசித்தார்.

வழக்கம்போல் பொது இடங்களுக்கு வருவதுபோல எந்த வித ஒப்பனையும் இன்றி வந்தார். அவருடன் குடும்பத்தினரும் வந்திருந்தனர். தியேட்டருக்கு ரஜினி வந்தபோது ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பதிலுக்கு ரஜினி “அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார்” என்று சொல்லியபடியே தியேட்டருள் சென்றார்.
உள்ளே சென்றதும், அங்கிருந்த ரசிகர்கள் அனைவரையும் நோக்கி, கைகளை மேலே தூக்கி வணங்கினார். ரசிகர்கள் கைகளைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
Patrikai.com official YouTube Channel