நானும் ரெளடிதான்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்வேதா சாபு சிரில் கலை இயக்கம் செய்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது .

விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடிப்பதாக காதலர் தினத்தன்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தில் நடிகர் ஷீகான் ஹூசைனி இணைந்துள்ளார். பத்ரி படத்தில் தளபதி விஜய்யின் பாக்ஸிங் கோச்சாக இவர் நடித்த பாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. கராத்தே, மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்றவற்றில் கைத்தேர்ந்தவர் ஷீகான் ஹூசைனி.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ரெண்டு காதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

[youtube-feed feed=1]