1972-ல் ஏவிஎம் தயாரித்த காமெடி திரைப்படம் சாசேதான் கடவுளடா. முத்துராமன் நடித்த இதன் ரீமேக்கை ஆர்.கண்ணன் இயக்குகிறார்.
இதை இந்தக் காலத்துக்கு ஏற்றபடி ஆர்.கண்ணன் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. முத்துராமன் வேடத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் வேடத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர்.
காசேதான் கடவுளடா படத்தை சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இவர் முதலில் இதை நாடகமாகத்தான் எழுதினார். முத்துராமன், மனோரமா என பலரும் அதில் நடித்திருந்தனர். நாடகம் வெற்றிகரமாக ஓடவே ஏவிஎம் அதனை படமாக்கியது. சித்ராலயா கோபுவே படத்தை இயக்கினார்.
இப்படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாப்பாத்திரத்திலும், அவரது காதலியாக பிரியா ஆனந்த் அவர்களும் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
கண்ணன் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.