பிரபு சாலமன் இயக்கத்தில் ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் ராணா, விஷ்ணுவிஷால் நடித்துள்ள படம் காடன்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிறது. ராணா டக்குபதி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்தது படக்குழு அதில் ரிலீஸ் தேதியையும் அறிவித்திருந்தகத்து. ஏப்ரல் 2-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காடுகளை பாதுகாப்பதன் அவசியம், யானைகளின் வாழ்க்கைப் போராட்டம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

[youtube-feed feed=1]