சென்னை:

மிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கா.பாலச்சந்திரனை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் இதுவரை வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த அருள்மொழி பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, கா.பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  புதிய தலைவராக கா. பாலச்சந்திரன் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கா. பாலச்சந்திரன் இதற்கு முன்பு கடந்த 2 ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளராக பதவி வகித்து வந்தார்.

டிஎன்பிஎஸ்சியில் ஏராளமான ஊழல் புகார்கள் மற்றும்  பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் தமிழக அரசு  புதிய தலைவரை நியமனம் செய்துள்ளது.