சென்னை:  மெட்ராஸ்  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில்,  புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி மகாதேவன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டு உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர்நாத் பண்டாரி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து  மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் நியமித்தார். அதையடுத்து கங்காபூர்வாலா நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மே 28, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது பதவிக்காலம் நாளையுடன் (மே 23ந்தேதி) முடிவடைகிறது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்  1963 ல் சென்னையில் பிறந்த மகாதேவன், 1989 ல் வழக்கறிஞர் பணியை துவங்கினார். பின்னர் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர், கடந்த  2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது மூத்த நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன், தற்போது தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்