டெல்லி:
ச்சநீதி மன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய்.சந்திரசூட், தனது ஐ-பாட் மூலம் நீதிமன்ற நிகழ்வுகளை துரிதப்படுத்தி வருகிறார். மின்னனு செயலை விட அவர் விரைவாக செயல்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்றைய நவீன  டிஜிட்டல் யுகத்துக்கேற்ப நீதிமன்றங்களின் அன்றாட பணிகளிலும், டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகள் அனைத்தும் தமிழ் உள்பட பல்வேற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.  உலக நடப்புக்கேற்றவாறு புதுப்புது மாற்றங் கள் செய்யப்பட்டு வருகின்றன.
உச்ச நீதிமன்ற இ-கமிட்டி தலைவராக உள்ள நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கமிட்டி பல்வேறு நவீன முறைகளை புகுத்தி வருகிறது. நீதிமன்ற டிஜிட்டல் மையத்தின் மற்றொரு மைல்கல்தான் மெய்நிகர் நீதிமன்றம் (Virtual court). இது ஏற்கனவே  டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் ஆன்லைன் மூலமாக அபராதம்  செலுத்த வசதி ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டது. இன்று தமிழகத்திலும்,  விர்ச்சூவல் கோர்ட் எனப்படும் மெய்நிகர் நீதிமன்றறத்தை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் டெல்லியில் இருந்து இன்று காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவலால் அனைத்து பணிகளும் முடக்கப்பட்டபோது, காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தி சாதனை படைத்தது உச்சநீதி மன்றம்.
இந்த நிலையில், நீதிபதி சந்திரசூட் தனது ஐபாட் மூலம் விரைவாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. வழக்கு விசாரணை உள்பட  உச்சநீதி மன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் அவர்  தனது  ஐபாட் பயன்படுத்தியே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
வழக்கு விசாரணையின்போது, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி சந்திரசூட்,  “சகோதரர்களே.. கையேடு பரிமாற்றம்  மின்னணு வடிவத்தை பெற உள்ளது. இதனால் உங்கள் கோப்புகள் விரைவில் எனது சாதனத்தில் உள்ள கோப்புகளை விட வேகமாக நகரும் என்று தெரிவித்து உள்ளார்.
நீதிமன்றத்தில், விசாரணையின்போது, மற்ற நீதிபதிகளுக்கு ஊழியர்களால் காகித புத்தகங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில்,  நீதிபதி சந்திரசூட் மட்டும் டிஜிட்டல் முறையில் தனது ஐபாட் மூலமே நீதிமன்ற விசரணை உள்பட அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.