டில்லி,
சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமை நீதிபதியாக இருந்த ஜெகதீஷ்சிங் கேஹர் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
அவருக்கு ஜனாதிபதி ராம்நாம் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் உச்ச நீதி மன்றத்தின் 45வது தலைமை நீதிபதியாவார்.
தீபக் மிஸ்ரா கடந்த 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி ஒடிசா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றார்.
பின்னர் 1997 மார்ச் மாதத்தில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்ட பின்னர் 1997 டிசம்பர் மாதம் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்.
இவரது பரபரப்பான தீர்ப்பு, தமிழகத்திற்கு எதிராக தொடரப்பட்ட ஜல்லி வழக்கில், பல சட்ட சிக்கல்கள் எழுந்த போது சாதுர்யமாக தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார்.
அதுபோல, நாட்டையே உலுக்கிய மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு நள்ளிரவில் நடத்தி தூக்கு தண்டனையை உறுதி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.