டில்லி:
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதான குஜராத் சோஹ்ராபுதீன் ஷேக் கொலை வழக்கை விசாரித்த வ ந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லாயா மர்மமான முறையில் 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார். இந்த நீதிபதி மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று முதல் ஆளாக டில்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் ‘தி வயர்’ இதழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் அவர் கூறுகையில், ‘‘மரணமடைந்த நீதிபதியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதை விட மரணத்தின் மீதுள்ள மர்மங்களை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பிரிவினருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்க அந்த நீதிபதிக்கு ரூ.100 கோடி வரை பேரம் பேசிய குற்றச்சாட்டு தொடர்பாகவும், இதைத் தொடர்ந்து அவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியோ முடிவு செய்ய வேண்டும். குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்துவது நீதித்துறை மீதான களங்கத்தை அகற்ற உதவும். நீதித்துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை நிலைநாட்ட இந்த விசாரணை உதவும்.
நீதிபதி லாயா நேர்மையானவர். அவரது குடும்பத்தினரின் குற்றச்சாட்டு நீதித்துறை மீது தவறான எண்ணத்தை உருவாக்கிவிடும். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட போதுமான முகா ந்திரங்கள் உள்ளன. விசாரணை என்பது அத்தியாவசியமாகியுள்ளது. நீதித்துறை தான் நாட்டின் மிகப்பெரிய அமைப்பு. அதன் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். நீதித்துறை உறுப்பினரின் கு டும்பத்தினருக்கு எதிரான செயல்பாடுகளுக்கு கட்டாயம் பதில் கூறியே தீர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.