டெல்லி: பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில், போட்டியிட கால அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணுவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த எங்களை ரயில் நிலையத்தில் தடுத்து போலீசார் கைது செய்தனர் என்றும், அதனால் குறிப்பிட்ட காலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை , அதனால், வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க உத்தரவிடக் கோரி,  சிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது,  ஏன் தமிழ்நாட்டில் போட்டியிடவில்லை? . வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள்? , இங்கு உங்களுக்கு வாக்குகள் கிடைக்குமா என பல்வேறு கேள்விகளை  எழுப்பிய நீதிபதிகள்,  நீங்கள், “தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறீர்கள், கடைசி நாளில் அதுவும் வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள்?” என்று விவசாயியிடம் கேட்டது. இந்த மனு  விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்த மனு என்பதால் தள்ளுபடி செய்வதாக கூறினர்.
முன்னதாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் விவசாயி அய்யாக்கண்ணு, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வாராணசி செல்ல அண்மையில் கன்னியாகுமரி – பனாரஸ் விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். அவருடன் 120க்கும் மேற்பட்ட விவசாயிகளும் முன்பதிவு செய்திருந்தனர்.  அதைத்தொடர்ந்து,  மே 10ஆம் தேதி காலை தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அனைவரும் ரயிலில் ஏறி உள்ளனர். அனைவரும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், திடீரென அவர்களது டிக்கெட் ரத்து செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. இதனால், அவர்கள் தஞ்சை ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2மணி நேரம் ரயில் தாமதமானது.  இது பயணிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தியது. பின்னர், . ரயில்வே துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தங்களுக்கு இருக்கைகள் அமைத்து தரக் கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயி ஒருவர் ரயிலில் இருந்த அபாய சங்கிலியை இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்த போது இருக்கைகளை ஏற்படுத்தி தரவில்லை என கூறப்படுகிறது. வ  அங்கு ரயிலை மறித்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் பணிகளும் விவசாயிகளுக்கு எதிராக வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
.இதனால் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் அந்த ரயிலில் இருந்து இறங்கினர். பின்னர் வேறு ரயில்கள் மூலமாக வாரணாசி சென்றனர்.