சினிவைப்போல் நிஜ வாழ்விலும் அன்பும் ஆக்ரோஷமும் கலந்த நடிகர் – ஜுனியர் என்.டி.ஆர். ரசிகர்களை சட்டென்று அறைந்து விடுவார்.
ஆனால் குடும்பத்தினர் மீது அளவில்லாத பாசம் உள்ளவர். இவரது மனைவி பெயர்- லட்சுமி பிரனதி.
இருவருக்கும் கல்யாணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. அபய் ராம், பார்கவ் ராம் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
(நம் ஊர் அரசியல் குடும்பத்தினர் போல் தந்தை என்.டி.ராமராவ், பெயரை பிள்ளைகளுக்கும் சூட்டியுள்ளார்)
அண்மையில் லட்சுமியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. வித்தியாசமான பரிசு அளிக்க வேண்டும் என நினைத்தார்.
பெருத்த யோசனைக்கு பிறகு அந்த பரிசை கொடுத்தே விட்டார்.
என்ன பரிசு?
ஐதராபாத்தில் ஜுனியர் என்.டி.ஆருக்கு சொந்தமாக, பல கோடி ரூபாய் மதிப்பிலான பண்ணை உள்ளது.
அந்த பண்ணையை மனைவி பெயருக்கு எழுதி வைத்துள்ளார். மனைவியின் பிறந்த நாளை அங்கு தான் கொண்டாடி உள்ளார்.
– பா. பாரதி