மும்பை :
த்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’’வில் ‘’ உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து நடக்கிறது. அந்த மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்வங்களும், பெண்கள் கொல்லப்படுவதும் அதிக அளவில் நிகழ்கிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
’’அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிச்சென்றுள்ள நிலையில் அங்கு ராமராஜ்ஜியம் நடப்பதற்கு பதிலாக சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு, காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது’’ என சிவசேனா பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.
’’பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உயிர் இழந்த பெண்ணின் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்’’ என்றும் சிவசேனாவின் ’’சாம்னா’’ குறிப்பிட்டுள்ளது.
-பா.பாரதி.