ஜுன்18: முன்னாள் அமைச்சர் கக்கனின் பிறந்தநாள் இன்று !

Must read

ன்று ஜூன் 18….  வாழ்ந்து வரலாறு ஆன எளிமை மற்றும் நேர்மையின் உருவமான முன்னாள் தமிழக அமைச்சர் கக்கன் அவர்களின் பிறந்த நாள்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, தமிழகத்தின்மு தல்வராக காமராஜர் இருந்தார். அவரது அமைச்சரவை யில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கக்கன். எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன்.

மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர்.  மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார்.

சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர். அப்போதுதான் மேட்டூர் அணை, வைகை அணை எல்லாம் கட்டுமானப்பணி மேற்கொண்டவர்…

நேரு மற்றும் காமராஜருடன் கக்கன்

தோழர் ஜீவாவின் தலைமையில்தான் கக்கனின் திருமணம் நடந்தது. ஒய்வு பெற்ற காலத்தில் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார்.

தன் வயதான காலத்தில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் பொது வார்டில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்து இருந்தவர்.

முதலமைச்சர் எம்.ஜி.யார். வந்து சந்தித்த பிறகே அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இவர் யார் என்பதே தெரியும். அதையடுத்து கக்கனுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிய எம்.ஜி.ஆர்,  அதன்பிறகு  முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்து பயணம் போன்ற வற்றிற்கு உத்தரவிட்டார். அத்தோடு கக்கனுக்கு முதியோர் ஓய்வூதியமும் கிடைக்க வழியேற் படுத்தினார்.

மதுரை மருத்துவமனையில் கக்கனுக்கு உதவும் எம்.ஜி.ஆர்.

உலக வரலாறிலேயே ‘ கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் உயர் திரு கக்கன் அவர்கள் ஒரு வைரகல். கக்கன் போன்ற நாணயமான அரசியல்வாதி இந்திய அரசியல் கட்சிகள் எதிலும் கிடையாது .

விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு, திரு.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள்.

மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.

டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.

எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.

இன்று அவர் பிறந்த தினம்..

இன்றைய அரசியல்வாதிகள் ஒருமுறை கக்கனின் வாழ்க்கை சரித்திரத்தை புரட்டினால்… தமிழகம் செழிக்கும் என்பதில் வியப்பேதுமில்லை…

More articles

Latest article