அரவக்குறிச்சி, தஞ்சையில் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் ரோசையா கடிதம் எழுதி இருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி நடந்த சட்டபேரவை பொது தேர்தலில் 232 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரால் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி ஆகிய இரு தொகுதிளுக்கு தேர்தல்கள் ஜூன் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
இந்தநிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்களை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றும் ஆளுநர் ரோசய்யா தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், முன்கூட்டியே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது என்றும் ஆளுநர் ரோசய்யா அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.