அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் ‘அனிதா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தில் அனிதாவாக நடித்து வருகிறார் பிக் பாஸ் புகழ் ஜூலி.
இந்நிலையில் சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் பகுதியில், மஃப்ட்டியில் இருந்த காவலருடன் ஜூலியின் ஆண் நண்பர் ரஜிதிப்ரான் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக காவலர் அளித்த புகாரின் பெயரில் அவரை கைது செய்ததாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து நடிகை ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தன்னை பற்றியும், தனது நண்பர் குறித்தும் பரவிய தகவலில் சிறிதும் உண்மையில்லை. ஆதாரமற்ற செய்திகளை பரப்பி வருகிறார்கள் என கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel