தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை 7ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

திருச்செந்தூர் கோவில் விரிவாக்கம் மற்றும் கும்பாபிஷேகம் என்ற பெயரில், பெரும்பாலான கட்டிடங்கள், கடற்கரை யோரம் போன்றை இடித்து நொறுக்கப்பட்டு, பணிகள் முடிவடையாதவாறு உள்ளது. இதனால், பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லவே தயங்கும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே கோவில் தரப்பில் கட்டப்பட்ட பல பக்தர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் முறையாக கட்டப்படவில்லை என்று புகார்கள் எழுந்தன. அதுபோல தற்போதும், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் முறையாக பராமரிக்கப்பட்டு, மக்கள் நடமாடுவதற்கே முடியாத நிலை உள்ளது.
இதனால், கோவில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரத்தை முடிவு செய்வதில் கோயில் நிர்வாகம், அறநிலையத்து மற்றும் கோயில் விதாயகர்த்தா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு, உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கும் நேரத்தை கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமலாக அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அறநிலையத் துறை இணை ஆணையர் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குடமுழுக்கு விழா இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்குட நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் முகூர்த்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்து, இது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது