டெல்லி:
ந்தியாவில் ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும்  கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், கொரோனா சோதனைகளை யும் தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை மாநிலக்ளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில், சோதனைகள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை 29ந்தேதிய நிலவரப்படி, நாடு முழுவதும்  1 கோடியே 81லட்சத்து 90 ஆயிரத்தது 382 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர்  தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் (ஜூலை 30ந்தேதி) 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, அதாவது 6,42,588 பேருக்கு  கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனைகளில்  ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் (RT-PCR and Rapid Antigen tests) சோதனைகளும் அடங்கும்.
தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும்  1 கோடியே 88 லட்சத்து 32 ஆயிரத்தது 970 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லி, உத்தரபிரதேச மாநிலங்களில் பெரும்பாலும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளே மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.