ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் டும் எதிர்வினைக்கு ஆளானார்.
தற்போது பல்வேறு படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலி கலந்துரையாடும்போது ஒருவர் “நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மீண்டும் உங்கள் செவிலியர் பணிக்குத் திரும்பவில்லையா?” என கேட்டார் .
அதற்கு ஜூலி “செவிலியர் பணி என்பது ஒரு புனிதமான தொழில். அதற்கு முழு அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் தேவை. மற்ற வேலைகளைப் போல பணியைப் பகுதி நேர வேலையாகச் செய்ய இயலாது. ஒரே நேரத்தில் இரண்டு பணிகளைச் செய்வது மிகவும் கடினம். நோயாளிகளின் உயிரை என்னால் பணயம் வைக்க இயலாது” ena கூறியுள்ளார் .