பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் அரை கிலோ வெள்ளி, விலையுயர்ந்த பட்டு சேலைகள் உள்ளிட்டவைகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
92 வயதாகும் கே.கே.ரத்தினம், வயது மூப்பின் காரணமாக அவரது சொந்த ஊரான குடியாத்தம் தரணம்பேட்டை, பெரியப்ப முதலி தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 16-ந் தேதி திரைப்பட நடிகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை சென்றார்.
இந்நிலையில் ஜூடோ ரத்தினத்தின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
15 விலை உயர்ந்த பட்டுசேலைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த 2 ரோலக்ஸ் வாட்ச்கள், ரூ.20 ஆயிரம் உள்ளிட்டவை திருட்டு போய் இருப்பதாக புகார் அளித்தார்.