புதுடெல்லி:
சமூக வலைதளங்களின் ஊருவலால் தீர்ப்பு அளிப்பதில் அழுத்தம் ஏற்படுவதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏகே.சிக்ரி தெரிவித்துள்ளார்.
ஆசிய மற்றும் பிசிபிக் முதல் சட்ட அமைப்பின் மாநாட்டில் டிஜிட்டலில் பத்திரிகை சுதந்திரம் என்ற தலைப்பில் பேசிய நீதிபதி சிக்ரி, “நீதிமன்ற விசாரணைக்கு இணையாக முன்பும் பத்திரிகைகளும் செய்தியை போட்டு விசாரணைபோல் நடத்துவதுண்டு.
ஆனால் தற்போது சமூக வலைதளங்கள் வழக்கு போடுதிலிருந்து எப்படி தீர்ப்பு வரவேண்டும் என்பது வரை பதிவிடுகிறார்கள். இதனால் தீர்ப்பளிப்பதில் எங்களுக்கு சிரமமாக உள்ளது.
ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பே, சமூக வலைதளங்களில் அந்த வழக்கை பற்றி விவாதித்து தீர்ப்பும் கொடுத்துவிடுகிறார்கள்.
ஒருவித அழுத்தத்தில்தான் தீர்ப்பு அளிக்க வேண்டியிருக்கிறது என்றார்.