பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020 செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனை எம்கேபி நகர் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் தரப்பில், 35 நாட்களுக்கு மேலாக சிறை, இருப்பதாலும், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டது சோர்வு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவர்களின் கோரிக்கையை ஏற்று நடிகை மீராமிதுன், அவரின் நண்பர் அபிஷேக் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.