‘கோடீஸ்வரன்’ நிகழ்ச்சியின் தெலுங்கு பதிப்பான ‘உங்களில் யார் கோடீஸ்வரன்’ நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்குகிறார். இந்த் நிகழ்ச்சி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
முதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்து வரும் ராம் சரண் தேஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் டீஸர் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இது குறித்து ராம் சரண் தேஜாவும் மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது.