ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகின்றது. தென் ஆப்பிரிக்க அணியை முதல் இன்னிங்ஸில் 242 ரன்களில் சுருட்டினர் ஆஸ்திரேலிய பவுலர்கள். அதன் பின்னர் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 70.2 ஓவருக்கு 244 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் கைபற்றினர் தென் ஆப்ரிக்க பவுலர்கள். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை முதல் இன்னிங்சில் மாறி மாறி நிருபித்தனர்.
பின்னர் இரண்டாம் இன்னிங்ஸ்யை தென் ஆப்பிரிக்க அணியின் எல்கரும் டுமினியும் மிகவும் பொறுப்புடன் ஆடி ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு குடைச்சல் கொடுத்தனர். இருவரும் இணைந்து 250 ரன்கள் சேர்த்தார்கள். பின்னர் டுமினி 141 ரன்களிலும் எல்கர் 127 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். டுப்ளெஸ்ஸி 32 ரன்களில் ஆட்டமிழந்தார். பவுமா 8 ரன்களில் வெளியேறினார்.
3-ம் நாள் ஆட்டநேர முடிவின் போது தென் ஆப்பிரிக்க அணி 126 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 390 ரன்கள் குவித்தது. பிளாண்டர் 23, டி காக் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 388 ரன்களுடன் வலுவான நிலையை எட்டியுள்ளது தென் ஆப்ரிக்க அணி.