ரெய்ப்பூர்:
சுமன் பாண்டே என்ற பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், பாஜக தலைவர்களை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக ஹெல்மெட் அணிந்து சென்றனர்.
சத்தீஸ்கர் மாநில தலைநகரான ரெய்ப்பூரில் கடந்த சனிக்கிழமையன்று பத்திரிக்கையாளர் சுமன் பாண்டே என்பவரை, பாஜகவின் மாவட்டத் தலைவர் ராஜீவ் அகர்வால் உட்பட சிலர் தாக்கினர்.
இதனையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், தங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தி பத்திரிக்கையாளர்கள் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக, பாஜக தலைவர்களை ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்தனர்.
,