நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜினியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிக்கு காய்ச்சல் எனவும், அவருக்கு பண்ணை வீட்டில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து, இன்று (நவ. 22) தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கமளித்த ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் அகமது, ‛நடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை இல்லை. இது யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி; அவர் போயஸ்கார்டன் வீட்டில் தான் இருக்கிறார்,’ என தெரிவித்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர் சரவணன் சவடமுத்து தன்னுடைய முகநூலில் :
ரஜினியும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு உறுப்பினர்.
இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் வாக்களிக்க வருவாரா என்று காலையில் இருந்து மீடியாக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறா்கள்.
இதுவரையிலும் வரவில்லை. எப்போது வருவார் என்று தெரியாத நிலை.
போட்டியிடும் ஒரு அணியினர் ரஜினி வீட்டிற்கு போன் செய்து கேட்டபோது, “வருவார்.. வருவார்” என்றெல்லாம் இழுத்தவர்கள், கடைசியில் “ஸாருக்கு லேசா காய்ச்சல் இருக்கு. அதான் கிளம்பலை..” என்று சொல்லி அழைப்புகளுக்கு புள்ளி ஸ்டாப் வைக்க முயற்சித்திருக்கிறார்கள். .
இன்னொரு டீம் முயற்சி செய்தபோது, “அவர் இங்க இல்லையே.. பண்ணை வீட்டுலல இருக்காரு. ரெஸ்ட் எடுக்குறாரு.. வருவாரான்றது சந்தேகம்தான்.. ஏன்னா கொரோனா பயம் இருக்குல்ல..” என்று மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த இரண்டு அணியினரும் ‘தாங்கள்தான் உண்மையைச் சொல்கிறோம்’ என்ற நினைப்பில் மீடியாக்களிடம் இதையே சொல்ல..
மீடியா மூளை.. இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே நியூஸாக பரப்பிவிட்டது..!
‘ஜர்னலிஸம்’ எந்த லட்சணத்துல போய்க்கிட்டிருக்கு பாருங்க..!!!
கேவலம்..! என பதிவிட்டுள்ளார் .
https://www.facebook.com/100000806701826/posts/3450892454947611/?sfnsn=wiwspmo