நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கு தற்போது சிபிஐ வசம் உள்ளது .

இதற்கு பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர் தனது டவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார் :

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எவ்வாறு அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டதோ அதே உத்தி தான் நடிகர் சுசாந்த் சிங் தற்கொலையிலும் நடக்கிறது என்றும் ஜெயலலிதா மரணத்தில் ‘கமிஷன்’ விசாரனை; சுசாந்த் சிங் வழக்கில் CBI, அமலாக்கத்துறை விசாரனை.மரணத்திலும் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் என சாடியுள்ளார் .

ஜெயலலிதாவிற்கு தலைசிறந்த மருத்துவம் வழங்கப்பட்டதும், சுசாந்த் சிங் மன அழுத்தத்தில் இருந்ததுமே உண்மை. ஜெயலலிதா வழக்கில் – சசிகலா;சுசாந்த் சிங் வழக்கில் – ரியா;எந்த ஆதாரமும் இல்லாமல் இவர்கள் வில்லிகளாக சித்தரிக்கபடுகிறார்கள்.வட இந்திய ஊடகம் – ரியாவிற்கு செய்வது உட்சபட்சம் என சுட்டிக்காட்டியுள்ளார் .

ரியாவும்-சுசாந்த சிங்கும் ஒன்றாக வாழ்ந்திருந்தார்கள்.தற்போது ரியாவிற்கு எதிரான அமலாக்கதுறை வழக்கு – அந்த காலத்தில் அவர், சுசாந்த் பணத்தை ஏன் பயன்படுத்தினார்? என்று….காதலி, காதலன் பணத்தை பயன்படுத்தி விமான கட்டனம் மற்றும் அலங்கார பொருட்கள் வாங்குவது குற்றமா? இதை ஒரு விஷயமாக அமலாக்கதுறை விசாரிக்கிறது என கூறியுள்ளார் .

மேலும் இதை விட அப்பட்டம் பிகார் செய்தது என கூறியுள்ளார்.சுசாந்த் இறந்தது மும்பையில். அதில் குற்றம் நடந்திருந்தாலும் அதை விசாரிக்கவேண்டியது மும்பை காவல்துறை. அவர்கள் எல்லை அது. அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.ஆனால் பிகார் தனியாக வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்கள்.அதனை CBIக்கு மாற்றுகிறார்கள்.எதற்கு இவ்வளவு குழப்பங்கள் என கேள்வி கேட்டுள்ளார் .

தமிழக்கத்தை சேர்ந்த இரண்டு மருத்துவ மாணவர்கள் டில்லியில் சமிபத்தில் இறந்தார்கள். டில்லி காவல்துறையே விசாரித்து அதனை தற்கொலை என் வழக்கை முடித்துவைத்தனர்.

தமிழக காவல்துறை தனியாக வழக்குபதிந்து விசாரித்திருந்தால் அனுமதித்திருப்பார்களா ? தமிழகம் கொடுத்திருந்தால் CBI எடுத்திருக்குமா ?

CBI எல்லை விவகாரத்தில் தெளிவாக இருப்பார்கள்.

கர்நாடக சுரங்க மோசடி வழக்கு. குற்றம்சாட்டபட்டவர்கள் பாஜக தலைவர்கள். வழக்கு CBIக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால் விசாரனை இல்லை,ஏன்?
அந்த சுரங்கம் சென்னை துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்யப்பட்டது, தமிழகம் எல்லை.அனுமதி இல்லாததால் விசாரனை இல்லை.

2.அதானி நிலக்கரி இறக்குமதி தொடர்புடைய வழக்கு. 2014ஆம் முதற்கட்ட விசாரனை பதியப்படுகிறது. 2015ஆம் வழக்கு மூடப்படுகிறது, ஏன் ?

அந்த நிலக்கரி மகாராஸ்ட்ரா மாநிலத்தில், அந்த மாநில அரசின் திட்டதிற்கு பயன்படுத்தபட்டது. அது அவர்களின் எல்லை. அவர்கள் அதிகாரவரம்பு. அதனால் வழக்கு மூடப்பட்டது.

பிகார் வழக்கை CBIக்கு மாற்றி வெளியிட்ட அறிவிக்கை விசித்திரமானது.
மாநில அரசு வழக்கை ஒப்படைக்கும் போது தங்கள் மாநிலத்திற்குள் வந்து விசாரிக்க CBIக்கு அனுமதி தரவேண்டும். தமிழகம் தூத்துகுடி வழக்கில் தந்தது போல, ஆனால் பிகார் தங்கள் எல்லை மட்டுமல்ல அடுத்த மாநிலத்திற்கும் அனுமதித்துள்ளது.

பெரும்பான்மை வடஇந்திய ஊடகம் தரம்தாழ்ந்துவிட்டது

ரியாவின் செல்போன் அழைப்பு விவரங்களை கசியவிடுகிறார்கள்.அதைக்கொண்டு ஊடகம் விவாதிக்கிறது.

“ரியாவும்-சுசாந்தும் வெறும் 147 முறை மட்டுமே 6 மாதங்களில் அலைபேசி மூலம் பேசியிருக்கிறார்கள்;வேலைகாரியிடம் அதிகம் பேசியிருக்கிறார் ரியா”-விவாதம் என தன் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

நன்றி : அரவிந்த் குணசேகர்