
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார்.
பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸானது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தர்பார் திருவிழாவாக கொண்டாடினர்.
படம் வெளியாகி 4 நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது .
ஆனால் படம் நஷ்டமடைந்ததாக கூறி நடிகர் ரஜினியை நேரில் சந்திக்க விநியோகஸ்தர்கள் வருகை தந்துள்ளனர். ரூ.65 கோடி கொடுத்து தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்களுக்கான இழப்பீட்டு தொகையை ரஜினிகாந்த பெற்றுத் தர வேண்டுமென விநியோகஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு மசாலா படத்திற்கு 250 கோடி ரூபாய் வர்த் இல்லை என கூறியுள்ளார் . தர்பார் படத்திற்கு ரஜினிக்கு கொடுத்துள்ள சம்பளம் நூறு கோடி ருபாய் . அதற் GST 12 கோடி ருபாய் என கூறியுள்ளார் .நயன்தாராவிற்கு 5 1 /2 கோடி ரூபாய் சம்பளம் 60 லட்சம் GST .முருகதாஸ் முப்பது கோடி , அனிருத் இரண்டு கோடி என கூறியுள்ளார் .
மேலும் நூறு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு ரஜினி வர்த் இல்லை என்று கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]