சென்னை

மிழ்நாட்டில் கொரோனாவுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்க ஒரு கூட்டு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது.

தற்போது வரை கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்படவில்லை.

இதனால் உலகின் அனைத்து நாடுகளும் தடுப்பூசியைக் கண்டறியத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அதே முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்துடன் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்துள்ளது.

இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து கூட்டு முயற்சியில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிய முடிவு செய்துள்ளன.