பயோலொஜிக்கல்-இ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விரைவில் வெளிவர இருக்கும் ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பாக செயலாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒற்றை டோஸ் தடுப்பூசி மருந்தான இதனை பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமெரிக்க அரசு அனுமதியளித்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் போடப்படும் இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கு அதிகபட்சமாக இதுவரை எட்டு மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தரவுகள் தெரிவிப்பதாக கூறும் இந்நிறுவன அதிகாரிகள்.
ஜான்ஸன் & ஜான்ஸன் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு டெல்டா உள்ளிட்ட வேறு எந்த உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவன தடுப்பூசி நீடித்து செயலாற்றுவதுடன் டெல்டா வைரஸில் இருந்தும் பாதுகாக்கிறது என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகளே கூறியிருக்கிறார்கள்.
இவர்களின் இந்த அறிவிப்பு ஒற்றை டோஸ் தடுப்பூசிகளை தயாரித்து வரும் அஸ்ட்ரா ஜெனிகா-வின் கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக்-கின் ஸ்புட்னிக் லைட் போன்றவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.